Connect with us

Raj News Tamil

“பிச்சையாக பெற்ற சுதந்திரம்.. 2014 தான் உண்மையான சுதந்திரம்” – வைரலாகும் கங்கனாவின் பழைய வீடியோ!

இந்தியா

“பிச்சையாக பெற்ற சுதந்திரம்.. 2014 தான் உண்மையான சுதந்திரம்” – வைரலாகும் கங்கனாவின் பழைய வீடியோ!

ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மக்களவை தொகுதியில், பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுகிறார். இவர் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, பல்வேறு குற்றச்சாட்டுக்களை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இவர் பேசிய பழைய வீடியோ ஒன்றை , எதிர்கட்சியினர் தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர். அந்த வீடியோவில், 1947-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு கிடைத்தது சுதந்திரம் அல்ல என்றும், அது பிச்சை என்றும் கூறியுள்ளார்.

மேலும், 2014-ஆம் ஆண்டில், மோடி அரசு ஆட்சிக்கு வந்தது தான், இந்திய நாட்டிற்கு கிடைத்த உண்மையான சுதந்திரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை தற்போது பார்த்துள்ள நெட்டிசன்கள், கங்கனா ரணாவத்தை புறக்கணிக்க வேண்டும் உள்பட பல்வேறு ஹேஷ்டேக்குகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பழைய வீடியோவிற்கு, கங்கனா ரணாவத் மன்னிப்பு கேட்பாரா? அல்லது வேறு விதத்தில் எதிர்கட்சியினருக்கு பதிலடி கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More in இந்தியா

To Top