Connect with us

Raj News Tamil

ஷூட்டிங் முடிஞ்சாச்சு.. அடுத்த கட்டத்திற்கு ரெடியான கங்குவா!

சினிமா

ஷூட்டிங் முடிஞ்சாச்சு.. அடுத்த கட்டத்திற்கு ரெடியான கங்குவா!

சூர்யாவின் நடிப்பு பசிக்கு தீனி போட்ட படம் என்றால், அது ஏழாம் அறிவு தான். உண்மையான போதி தர்மனை தற்போதுள்ள மனிதர்கள் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால், அவர் இவ்வாறு தான் இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு, உடல் அளவிலும், நடிப்பளவிலும் சூர்யா மிரட்டியிருப்பார்.

அந்த படத்திற்கு பிறகு, சரித்திர கால கதையில் நடிக்காமல் இருந்த இவர், தற்போது கங்குவா என்ற பிரம்மாண்ட பட்ஜெட் திரைப்படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படம், 10 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு இருக்க, இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் ஷீட்டிங்கை சிறுத்தை சிவா ஒருவழியாக முடித்துவிட்டாராம்.

தற்போது, இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாம். இதனை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top