சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் கங்குவா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் உருவாகி உள்ள இந்த படம், வரும் 14-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய முக்கிய கலைஞர் ஒருவர், உயிரிழந்துள்ளார். அதாவது, கங்குவா படத்தில் எடிட்டராக பணியாற்றியவர் நிஷாத் யூசுப். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் பல்வேறு வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ள இவர், சூர்யாவின் 45-வது படத்திலும் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் பனம்பில்லி பகுதியில் உள்ள தனது குடியிருப்பில், இன்று அதிகாலை 2 மணியளவில், உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இந்த தகவல், தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில், மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.