கங்குவா புதிய ரிலீஸ் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா நடிப்பில், சிவா இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

ஆனால், அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் திரைப்படமும், ரிலீஸ் ஆவதால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவதாக, படக்குழுவினர் அறிவித்தனர்.

இதனால், புதிய ரிலீஸ் தேதியை எதிர்நோக்கி, ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில், தற்போது புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் நவம்பர் 14-ஆம் தேதி அன்று, கங்குவா படம் ரிலீஸ் ஆக உள்ளது.

RELATED ARTICLES

Recent News