Connect with us

Raj News Tamil

கங்குவா படத்தின் கதையை லீக் செய்த அமேசான்! ரசிகர்கள் அதிர்ச்சி!

சினிமா

கங்குவா படத்தின் கதையை லீக் செய்த அமேசான்! ரசிகர்கள் அதிர்ச்சி!

வித்தியாசமான திரைப்படங்களில் நடிப்பதற்கு பெயர்போன சூர்யா, தற்போது கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மீதுள்ள பிரம்மாண்ட எதிர்பார்ப்பு காரணமாக, டிஜிட்டல் உரிமத்தை, அமேசான் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது.

இந்நிலையில், இந்நிறுவனம் கங்குவா படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்னவென்பதை, தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

அதாவது, “1700 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான டைம் டிராவலை மையப்படுத்திய திரைப்படம் இது.

500 வருடங்களுக்கு முன் செய்ய முடியாததை 2023 ஆம் ஆண்டு ஹீரோ செய்து முடிக்கிறார்” என்று, அமேசான் பிரைம் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

More in சினிமா

To Top