சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் சிவா.
இவர் தற்போது, நடிகர் சூர்யாவை வைத்து, கங்குவா என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படம், வரும் அக்டோபர் 10-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. இந்த டிரைலரில், ரசிகர்களை மிரள வைக்கும் அளவிற்கு, பல்வேறு பிரம்மாண்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளது.