திருவள்ளுர் தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம். அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.
சிறப்புமிக்க இந்த திருவள்ளுவர் தினத்தில், வாழ்வியலை மையமாக வைத்து, மக்களுக்குத் தேவையானது, தேவையற்றதை தெளிவாகச் சொல்லும் உலகப் பொதுமறையாம் திருக்குறளைத் தந்த தெய்வப் புலவர் திருவள்ளுவரைப் போற்றுவோம். கொண்டாடி மகிழ்வோம்.
— K.Annamalai (@annamalai_k) January 16, 2023
அனைவருக்கும் இனிய திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள். pic.twitter.com/Prlf6BIfym
இந்த பதிவில் திருவள்ளுவருக்கு காவி உடையும், நெற்றியில் விபூதி பட்டையும், ருத்திராட்சம் அணிவித்து இருப்பது போல் வெளியிட்டுள்ள படத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இது குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அதற்க்கு பதில அளித்த அவர், திருக்குறளை படித்தால் காவிக்கும் திருக்குறளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என புரிந்து கொள்வார்கள். திருக்குறளை படிக்க வேண்டும். திருக்குறளுக்கான கருணாநிதி உரை தெளிவாக உள்ளது. அதை படித்தாலே புரிந்து கொள்ளலாம் என கூறியுள்ளார் .