“திமுக பலபேரை பார்த்துள்ளது” – அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில், நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், திமுக எம்.பி கனிமொழி, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி, சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை தொடர்ந்து, ஆளுநரையும் தங்களது 4-வது கரமாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

மேலும், ஜனநாயகத்தின் மீதும் நாடாளுமன்றத்தின் மீதும் உள்ள மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என்றும், எதிர்க்கட்சிகள் வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகளுக்கு பாஜக செவிக் கொடுப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கனிமொழி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார். அதாவது, “அண்ணா அறிவாலயமும் திமுகவும் பல பேரை பார்த்துள்ளது. யார் யாரை பிரித்தெடுக்கிறார்கள் என பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News