கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-
“எனக்கும் தோவாளை பகுதியை சேர்ந்த சதீஷ் பெருமாள் என்பவருக்கும், கடந்த 2013-ஆம் ஆண்டு அன்று திருமணம் நடைபெற்றது. ஆனால், அவருக்கும், எனக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டோம்.
நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது, நெருக்கமாக இருந்த தருணங்களை, சதீஷ் வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்து வைத்திருந்தார்.
அந்த வீடியோவையும், புகைப்படத்தையும், தற்போது இணையத்தில் வெளியிடுவேன் என்று என்னை மிரட்டி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு அந்த புகார் மனுவில், இளம்பெண் கூறியிருந்தார். இந்த புகாரை பார்த்த காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத், சதீஷ் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி, சைபர் க்ரைம் காவல்துறையினருக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்பேரில், அவரை கைது செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் ஆபாச வீடியோவை வெளியிடுவேன் என்று கணவனே மிரட்டியுள்ள சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.