கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரூபாய் 16 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் ரூ.450 கோடி வரை வசூல் செய்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது. ‘காந்தாரா’ படத்தின் கதைக்கு முந்தைய சம்பவங்களை கொண்டு உருவாக்கப்படும் படம் தான் ‘காந்தாரா 2’ என்றும் இந்த கதையை தற்போது ரிஷப் ஷெட்டி எழுதி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை முழுக்க முழுக்க காடுகள் மற்றும் கடலோர பகுதிகளில் படமாக்க அவர் பக்கா பிளான் போட்டுள்ளதாகவும், இதற்காக அவர் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ‘காந்தாரா 2’ திரைப்படம் இந்திய திரை உலகில் மிகப்பெரிய பேசப்படும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.