ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த திரைப்படம் காந்தாரா. கடந்த ஆண்டு வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. 1000 கோடிக்கும் அதிகமாக இந்த திரைப்படம் வசூலித்து சாதனை புரிந்தது.
இந்த படத்தில் ரிஷப் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்திருந்த சப்தமி கௌடா என்பவரும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற் பெற்றிருந்தார். இந்நிலையில், நடிகை சப்தமி கௌடா ஒரு நீச்சல் வீராங்கனை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் கலந்துக் கொண்டுள்ள இவர், பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார். இதனை அறிந்த அவரது ரசிகர்கள், ஆச்சரியத்துடன் இருந்து வருகின்றனர்.