பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். பின்னர் நடிகர் தனுஷை வைத்து கர்ணன் திரைப்படத்தை உருவாக்கி, தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார். தற்போது மாமன்னன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அதே நேரம் மீண்டும் தனுஷை வைத்து புதிய படம் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை ஜீ(zee) ஸ்டுடியோஸ் மற்றும் தனுசின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு தனுஷ் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
