Connect with us

Raj News Tamil

பாஜக கட்சியில் இணையும் சூப்பர் ஸ்டார்!

இந்தியா

பாஜக கட்சியில் இணையும் சூப்பர் ஸ்டார்!

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளில், மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக, பாஜக உருவெடுத்துள்ளது. இந்த கட்சியை வீழ்த்துவதற்கு, எதிர்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக திரள வேண்டும் என்று கூறும் அளவிற்கு, அக்கட்சியின் பலம் உள்ளது.

இந்த பலத்தை உயர்த்தும் நோக்கில், பல்வேறு பிரபலங்களை தங்களுடைய கட்சியில் இணைத்து, அதன் ரசிகர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்த, பாஜக முடிவு செய்திருப்பதாக, அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கன்னட சினிமாவில் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகரான கிச்சா சுதீப், பாஜக கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்கான யுக்தியாக, பாஜக இந்த முடிவுகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top