BREAKING || சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு! இந்த முறை வெல்லப்போவது யார்?

கர்நாடக மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. பசவராஜ் பொம்மை அம்மாநிலத்தில் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த சட்டப்பேரவைக்கான ஆட்சிக் காலம் வரும் மே 24-ஆம் தேதியோடு முடிவடைய உள்ளது. இதன்காரணமாக, விரைவில் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கும் தேதியை அறிவித்துள்ளார். அதன்படி, வரும் 10-ஆம் தேதி அன்று, தேர்தல் நடத்தப்பட்ட, 13-ஆம் தேதி அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த முறை, 2.62 கோடி ஆண் வாக்காளர்கள், 2.59 கோடி பெண் வாக்காளர்கள் என மொத்தம் 5.21 கோடி வாக்காளர்கள், வாக்களிக்க உள்ளனர். 80 வயதை கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதியும், இந்த முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News