கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் போட்டியிடுவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில் இபிஎஸ் சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடும் அன்பரசன் வேட்பு மனு ஏற்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் நெடுஞ்செழியன், காந்திநகர் தொகுதியில் குமார் மற்றும் கோலார் தங்க வயல் தொகுதியில் ஆனந்தராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக மனு தாக்கல் செய்தனர்.
இதில் நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் காந்திநகர் தொகுதியில் குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தின் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வேட்பாளராக அறிவித்துள்ள குமார் என்பவரிடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டது.
இந்நிலையில், காந்திநகர், கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.