தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை?

தமிழகத்தை தொடர்ந்து, கர்நாடகாவிலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்க வேண்டும் என்ற, கருத்து வலுத்து வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில், வடமாநிலத்தவர்கள் விற்பனை செய்த, பஞ்சு மிட்டாய் பாக்கெட்டுகளை, உணவு பாதுகாப்பு அறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, சோதனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அந்த சோதனையின் முடிவுகள் அதிர்ச்சி அளித்தன. அதாவது புற்றுநோயை ஏற்படுத்த கூடிய, ‘ரோட்டமைன் பி’ என்ற ரசாயனத்தை, பஞ்சு மிட்டாய்களில் கலந்து விற்பனை செய்தது தெரியவந்து உள்ளது.

இதையடுத்து நிறம் சேர்த்து விற்பனை செய்யப்படும், பஞ்சு மிட்டாய்களுக்கு, தமிழக அரசு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் சர்க்கரை பயன்படுத்தி தயாரிக்கப்படும், வெள்ளை நிற பஞ்சு மிட்டாய்களுக்கு தடை இல்லை என அறிவிக்கப்பட்டது.

உயிருக்கு உலை வைக்கும் வகையில் உள்ள, பஞ்சு மிட்டாயை கர்நாடகாவிலும் தடை செய்யலாமா என்று, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News