கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின் போது சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரர் தற்கொலை செய்துகொண்டார். அப்போது அமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா இதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று 2022-ம் ஆண்டு போராட்டம் ஒன்று நடந்தது.
இந்த போராட்டத்திற்கு தொடர்புடைய சித்தராமையா, ராமலிங்கரெட்டி, பாட்டீல் மற்றும் ரன்தீப் சிங்கர்ஜேவாலா ஆகியோருக்கு எதிராக பாஜக அரசு பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை எதிர்த்து அவர்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது. மேலும், சித்தராமையா சிறப்பு நீதிமன்றத்தில் மார்ச் 6-ஆம் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளது.
ராமலிங்க ரெட்டி மார்ச் 7ம் தேதியும், பாட்டீல் மார்ச் 15-ம் தேதியும், ரன்தீப் சிங் சர்ஜிவாலா மார்ச் 11-ம் தேதி ஆஜராகவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.