224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், 24 மணி நேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் வெற்றி பெற போவது யார் என்பது நாளை தெரிந்து விடும்.