கடந்த 10-ஆம் தேதி நடந்த சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியான வண்ணம் உள்ளது. ஆரம்பத்தில் இருந்து முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு, கூட்டணி அடிப்படையில் தான் ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது யார் முன்னிலையில் உள்ளார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, பாஜக 70 இடங்களிலும், காங்கிரஸ் 120 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மேலும், ம.ஜ.த 26 இடங்களிலும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னலையில் உள்ளது.
தனிப்பெரும்பான்மைக்கு, 113 இடங்கள் மட்டுமே போதுமானதாக உள்ள நிலையில், காங்கிரஸ் 120 இடங்களில் முன்னிலை பெற்று, அதிரடி காட்டி வருகிறது. இதன்மூலம், தனிப்பெரும்பான்மையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.