பாஜக தலைமையின் கீழான ஆட்சி முடிவுக்கு வர உள்ளதையடுத்து, கர்நாடகாவில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 10-ஆம் தேதி அன்று, 224 தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ம.ஜ.த ஆகிய கட்சிகள் போட்டியிட்டுள்ளனர்.
224 தொகுதிகளில், 113 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில், இந்திய அரசியலின் முக்கியமான காலகட்டம் என்னவென்ற தெரிய வாய்ப்புள்ளது.
இந்த தேர்தல் வெற்றி? தோல்வி? வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், இது மிகவும் முக்கியமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. எனவே, இதில் வெற்றி பெறுவதற்கு, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும், தீவிர ஆலோசனையில் இருந்து வருகின்றனர்.