ரஜினிக்கு குடைபிடித்த கர்நாடக அமைச்சர் முனி ரத்னா..!

கர்நாடக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் புனித் ராஜ்குமார். கடந்த ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது இழப்பு கர்நாடகா சினிமா மட்டுமல்லாது, இந்திய சினிமாவையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவரின் பெறுமைகளை போற்றும் வகையில், அம்மாநில அரசு சார்பில் கர்நாடக ரத்னா விருது கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் சென்ற ரஜினிகாந்துக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு கொட்டும் மழையில் மேடையில் பேசிய அவருக்கு, கர்நாடக அமைச்சர் முனி ரத்னா குடைபிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவரின் ரசிகர்கள் தலைவர் எங்கு சென்றாலும் ராஜ மறியாதை தான் என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.