திருவொற்றியூர் காவல் நிலையத்தில் மல்லுக்கட்டிய நின்ற கர்நாடக போலீசாரும் தமிழக வழக்கறிஞர்களும் இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் அப்பையா பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது வீட்டில் 2019-ஆம் ஆண்டு பணம் மற்றும் ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக தர்மலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரில் பெயரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்புடைய ராஜேஷ் என்பவர் சென்னை எர்ணாவூர் சேர்ந்தவர் இவர் தனது 80 சவரன் பங்கை தீனா என்பவரிடம் கொடுத்து திருவொற்றியூரில் உள்ள இரண்டு அடகு கடைகளில் வைத்தாக கூறியுள்ளார்.
இந்நிலையில் காநாடக போலீசார் அடகு கடை உரிமையாளர்களை திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அடகு கடை உரிமையாளர்கள் சார்பில் வந்த வழக்கறிஞர்களிடம் ஆதாரம் இல்லாமல் டீல் பேசியதாகவும் இதனால் வழக்கறிஞர்களும் கர்நாடக போலீசாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கு ஒருவர் மல்லுக்கட்டி நின்றனர். இதனால் இருதரப்பினரையும் திருவொற்றியூர் காவல் நிலைய போலீசார் சமாதானம் செய்ய முற்பட்ட போது கர்நாடக போலீசர் சமாதானம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் திருவொற்றியூர் காவல் நிலையம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.