கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ஆம் தேதி அன்று தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரூபாய் 39 லட்சம் மதிப்பிலான வெள்ளிப்பொருட்களை, வாகன சோதனையின்போது, தேர்தல் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த வாகனத்தின் உரிமையாளர் தொடர்பாக விசாரணை நடத்தியதில், அது தயாரிப்பாளர் போனி கபூருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது.
உரிய ஆவணங்களை காட்டிவிட்டு, அந்த பொருட்களை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தகவல், அம்மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.