வீட்டு பக்கத்தில் இருக்கும் பேக்கரி.. கேக் சாப்பிட போறீங்களா? ஜாக்கிரதை…

உணவு பொருட்களில் கலப்படம் நடப்பது என்பது சமீபகாலங்களாக அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவின் உணவு பாதுகாப்புத்துறையினர், பெங்களூரில் ஆய்வு ஒன்று நடத்தியுள்ளனர். இந்த ஆய்வுக்காக, பல்வேறு பேக்கரிகளில் இருந்து கேக் மாதிரிகளை பரிசோதனை செய்துள்ளனர்.

மொத்தமாக, 235 மாதிரிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில், 223 மாதிரிகள் சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது. ஆனால், மீதமுள்ள 12 மாதிரிகளில், புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கல்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக, அல்லுரா ரெட், சன்செட் யெல்லோவ் FCF, பொன்சேவ் 4R, டார்ட்ரசைன், கர்மோய்சைன் ஆகிய செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், ரெட் வெல்வெட் மற்றும் ப்ளாக் ஃபாரஸ்ட் ஆகிய கேக்குகளில் , அதிக அளவில் இந்த செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிகாரிகள், இந்த மாதிரியான செயற்கை வண்ணங்கள், புற்றுநோயை ஏற்படுத்துவது மட்டுமின்றி, மனநலம் மற்றும் உடல்நலத்தையும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், கொடிய கெமிக்கல்கள் மற்றும் செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக் கூடாது என்றும், பேக்கரி உரிமையாளர்களை உணவு பாதுகாப்புத்துறையின் ஆணையர் ஸ்ரீவாஸ் ராவ், எச்சரித்துள்ளார்.

FSSAI வழிகாட்டுதல்களின் படி, பெரும்பாலானா செயற்கை வண்ணங்கள், ஒரு கிலோவுக்கு 100 mg என்ற அளவிலேயே இருக்க வேண்டும். ஆனால், சில பேக்கரி உரிமையாளர்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News