அகில இந்திய கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில், ரத்த தானம் வழங்கியவர்களுக்கு நன்றி விழா நடத்தப்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த இந்த விழாவில், நடிகர் கார்த்தி பேசியிருந்தார்.
அப்போது, 2 திரைப்படங்கள் முடித்து விட்டோம் என்றும், விரைவில் அவை ரிலீஸ் ஆகிவிடும் என்றும் கூறினார். மேலும், சர்தார் 2 விரைவில் துவங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கார்த்தி, அடுத்த வருடம் லோகேஷ் உடன் மீண்டும் பிரியாணி பக்கெட்டை எடுக்க வேண்டும் என்றும், நகைச்சுவையாக பேசினார். இதன்மூலம், கார்த்தியின் சர்தார் 2, கைதி 2 படங்களின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது உறுதியாகியுள்ளது.