Connect with us

Raj News Tamil

ரகசியமாக வைத்திருந்த கார்த்தி! போட்டுக் கொடுத்த நிறுவனம்!

சினிமா

ரகசியமாக வைத்திருந்த கார்த்தி! போட்டுக் கொடுத்த நிறுவனம்!

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் நலன் குமாரசாமி.

இந்த படங்களுக்கு பிறகு, நீண்ட நாட்களாக படம் எதுவும் இயக்காமலே இருந்த நலன், தற்போது நடிகர் கார்த்தியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வந்தார்.

இப்படத்தின் டைட்டில் என்னவென்று, படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்த நிலையில், அமேசான் நிறுவனம் தற்போது அதனை வெளியிட்டுள்ளது.

அதாவது, அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், கார்த்தியும், நலன் குமாரசாமியும் கலந்துக் கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அமேசான், வா வாத்தியார் என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்டிருந்தது.

இதனை பார்த்த ரசிகர்கள், படத்தின் டைட்டில் இதுதான் என்று கண்டறிந்துள்ளனர். படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top