சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் கார்த்தி? எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவரது 49-வது பிறந்த நாளை, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள், இன்று கொண்டாடினர்.

இந்நிலையில், இவரது கங்குவா திரைப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கங்குவா திரைப்படத்தின் இறுதியில், கார்த்தி நடிப்பது போன்ற காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளதாம்.

மேலும், கங்குவா படத்தின் 2-ஆம் பாகத்தில், கார்த்தி தான் முக்கிய வில்லனாகவும் நடிக்க உள்ளாராம். சூர்யாவின் பிறந்த நாள் அன்று, ரசிகர்களுக்கு கிடைத்த இந்த அப்டேட், அவர்களை பெருமளவில் குஷியில் ஆழ்த்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News