ஜப்பான் படத்திற்கு பிறகு, நலன் குமாரசாமி இயக்கும் படத்தில், நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் நடித்து முடித்த பிறகு, யாருடன் கூட்டணி வைக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, அசுரன், ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவரும், டாணாக்காரன் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவருமான தமிழின் இயக்கத்தில், புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
60-களின் காலகட்டத்தில் இருந்த கேங்ஸ்டர்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.