கேப்பில் சிக்ஸ் போட பார்க்கும் கார்த்திக் சிதம்பரம்..!

தமிழக காங்கிரஸ் கடந்த 15-ஆம் தேதி கட்சி வளர்ச்சி சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடத்தியது. அந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகி நியமனத்தில் ஒருதலை பட்சமாக நடந்துகொண்டதாக, காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு எதிராக ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு தமிழக காங்கிரசில் உட்கட்சிப் பூசல் வெளிப்படையாக அம்பலமாகி வரும்நிலையில், தனக்கு தலைவர் பதவி கொடுத்தால் திறம்பட செயல்படுவேன் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்துக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய இவர், தலைவர் பதவி கேட்பதில் எனக்கு கூச்சமில்லை என்றும் இந்த நேரத்தில் தலைவர் பதவி கொடுத்தால் திறம்பட செயல்படுவேன் என்றார். மேலும் அதற்கான நேரம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்தார்.