பீட்சா, ஜிகர்தண்டா, இறைவி என்று பல்வேறு தரமான படங்களை இயக்கியவர் கார்த்தி சுப்புராஜ். இவர், சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கியிருந்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்நிலையில், சூர்யாவின் படத்திற்கு பிறகு, நடிகர் ஜெயம் ரவியை வைத்து புதிய படத்தை கார்த்தி சுப்புராஜ் இயக்க உள்ளாராம்.
அதாவது, ஜெயம் ரவிக்கு கார்த்திக் சுப்புராஜ் கதை கூறியுள்ளாராம். இந்த கதை, அவருக்கு பிடித்துவிட்டதால், படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.