பீட்சா படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த திரைப்படம் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹா, சித்தார்த், லஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக, அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாபி சிம்ஹாவின் நடிப்பு, பலரையும் ஆச்சரியம் அடைய வைத்திருந்தது. இந்நிலையில், இந்த படத்தில், அசால்ட் சேது கதாபாத்திரத்தில், முதலில் நடிகர் பார்த்திபன் தான் நடிக்க இருந்தாராம்.
ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, அவர் நடிக்க முடியாததால், பாபி சிம்ஹா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.