அரசியல்
பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெறும் கருணாநிதி குறித்த பாடம்..!
வரும் கல்வியாண்டு முதல் கருணாநிதி குறித்த பாடம் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.
திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி சுமார் 70 ஆண்டுகள் தமிழக அரசியலின் மிக முக்கியமான தலைவராக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். தமிழ்நாட்டின் மிக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையையும் கருணாநிதிக்கு உண்டு.
இந்நிலையில் வரும் கல்வியாண்டு 9ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பு குறித்து இடம் பெற உள்ளது. செம்மொழியான தமிழ் மொழி என்கிற தலைப்பில் தமிழ் பாட புத்தகத்தில் இடம்பெற உள்ளது.
You must be logged in to post a comment Login