கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் தொடங்கியது

திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொது கூட்டம் சென்னை புளியந்தோப்பு பின்னி மில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தலைமையில் பொது கூட்டம் நடைபெறுகிறது. கூட்டணி கட்சி தலைவர் கி.வீரமணி, கே. எஸ் அழகிரி, திருமாவளவன், வைகோ, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன்,ஜவாஹிருல்லா, காதர்மொய்தீன், வேல்முருகன், ஈஸ்வரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேடையில் திமுகவின் மூத்த தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் அமர உள்ளனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக தலைமை கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் அமர தனித்தனியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இளைஞரணி, தொண்டரணி மாணவரணி, மகளிர் அணி திமுகவில் இருக்கும் அனைத்து அணியினரும் அமர்வதற்கு தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3 ஆம் தேதி நடைபெற இருந்த பொது கூட்டம் ஒடிசா ரயில் விபத்து காரணமாக தேதி மாற்றப்பட்டு இன்று நடைபெறுகிறது. விழா நடைபெறும் அரங்கம் முழுவதும் LED விளக்குகள் கொண்டு தலைவர்களின் புகைபடங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News