ஒரே அசிங்கமா போச்சு குமாரு…சவுக்கு சங்கரை புலம்ப விட்ட கரூர் மாவட்ட ஆட்சியர்

சவுக்கு சங்கரின் ட்விட்டர் விமர்சனத்திற்கு, பதில் அளித்து ரீ-ட்வீட் செய்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்.

கரூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தமிழக முதல்வர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்திற்கு வந்தனர்.

அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வரவேற்பு கொடுத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்த நிகழ்வை கிண்டல் செய்து, அதிகாரிகள் அதிகாரிகளைப் போல நடந்து கொள்ளுங்கள். கொத்தடிமைகளைப் போல நடந்து கொள்ளாதீர்கள். உங்கள் பதவிக்கு இது அழகல்ல என்று கரூர் மாவட்ட ஆட்சியரை விமர்சனம் செய்து சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஆட்சியரை டேக் செய்து இருந்தார்.

இந்தப் பதிவுக்கு பதில் அளித்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மத்திய மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த அமைச்சர்களை வரவேற்பது என்பது அதிகாரபூர்வ நெறிமுறை மற்றும் அரசியல் கட்சி வேறுபாடின்றி அதிகாரத்தில் உள்ள அனைவருக்கும் வரவேற்பு அளிப்பது வழக்கமான ஒன்றுதான் என கூறினார். மேலும் சமீபத்தில் கரூர் மாவட்டத்திற்கு வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ்-க்கு வரவேற்பு அளித்த புகைப்படத்தையும் இணைத்து தனது ட்விட்டர் பதிவில் சவுக்கு சங்கருக்கு பதிலளித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News