கரூர் மாவட்டம் மாயனூர் கதவனை அருகே மீன் விற்பனை நடைபெற்று வருகிறது. இங்கு ஆற்றில் உயிரோட பிடித்து வரும் மீன்களை பொதுமக்கள் அப்போதே உடனுக்குடன் வாங்கி செல்வது வழக்கம்.
கார்த்திகை மாதம் என்பதால் பலரும் சபரிமலைக்கு மாலை பணிந்து விரதம் மேற்கொண்டதால் கடந்த ஒரு மாதமாக மீன் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வந்தது.
தற்போது கார்த்திகை மாதம் முடிவடையும் நிலையிலும் பலரும் சபரிமலைக்கு சென்று திரும்பி வந்ததால் ஞாயிற்றுக்கிழமையான இன்று மாயனூர் கதவணையில் மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் அதிக அளவில் வந்தனர்.
இன்று ஜிலேபி கிலோ ரூபாய் 150 க்கும், கெண்டை மீன் கிலோ ரூபாய் நூறுக்கும், பாறை மீன் கிலோ ரூபாய் 160 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கூட்டம் அதிகளவு இருந்ததால் பொதுமக்கள், மீன் பிரியர்கள் நீண்ட நேரம் நின்று மீன்களை வாங்கிச் சென்றனர்.