நாளை அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி!

அஜித்தின் துணிவு திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது. ரிலீசுக்கு சில நாட்களே இருப்பதால், படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, சில்லா சில்லா என்ற பாடல் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், துணிவு படத்தின் செகன்ட் சிங்கிலான காசேதான் கடவுளடா பாடல், நாளை வெளியாக வாய்ப்பு உள்ளதாம். இதுகுறித்த அறிவிப்பு, இன்று வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.