தமிழ் சினிமாவின் 80-களின் காலகட்டத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கஸ்தூரி. ஆரம்பத்தில் சில படங்களில் நடித்து பிரபலமான இவர், அதன்பிறகு வாய்ப்புகள் கிடைக்காததால், சினிமாவில் இருந்து விலகினார்.
தற்போது, சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் கஸ்தூரி, அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை பேசி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது மகளுடன் நடனம் ஆடி, இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.