நட்புனா என்னனு தெரியுமா? படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் கவின்.
இந்த படத்திற்கு, லிஃப்ட், டாடா ஆகிய படங்களில் நடித்த இவர், தற்போது, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவருக்கும், இவரது நீண்ட நாள் காதலி மோனிக என்பவருக்கும், திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த ரசிகர்கள், அவரது புகைப்படத்தை இணையத்தில் தேட ஆரம்பித்தனர்.
நீண்ட தேடுதலுக்கு பிறகு, அவரது புகைப்படத்தை நெட்டிசன்கள் கண்டுபிடித்துவிட்டனர். இந்த புகைப்படம், தற்போது, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.