சினிமா
கவினுடன் கூட்டணி வைக்கும் பிரபல ப்ளாக் பஸ்டர் இயக்குநர்!

Published on
நட்புனா என்னனு தெரியுமா படத்தின் மூலம், ஹீரோவாக அறிமுகமானவர் கவின். இந்த படத்திற்கு பிறகு, லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
இதையடுத்து, இயக்குநர் எலன் இயக்கவுள்ள ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இவ்வாறு பிசியாக நடித்து வரும் கவின், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மாரி செல்வராஜ் தற்போது வாழை படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ்-க்கு பிறகு, துருவ் விக்ரமை வைத்து ஒரு படமும், தனுஷை வைத்து, இன்னொரு படமும் இயக்க உள்ளார்.
இந்த படங்கள் அனைத்தையும் முடித்த பிறகு, கவின் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என்று தெரியவந்துள்ளது.
Continue Reading
Related Topics:kavin, kavin next movie, mari selvaraj, mari selvaraj movie list
