Connect with us

Raj News Tamil

வெற்றிமாறன் படத்தில் இணையும் கவின்!

சினிமா

வெற்றிமாறன் படத்தில் இணையும் கவின்!

சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் ஒருசில நடிகர்களில் ஒருவர் கவின்.

லிஃப்ட், டாடா ஆகிய இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர், தற்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இப்படம், வரும் மே 10-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், கவினின் அடுத்த திரைப்படம் குறித்த, தகவல் ஒன்று கசிந்துள்ளது. அதன்படி, இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தான் தயாரிக்க உள்ளாராம்.

மேலும், அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் என்பவர் இயக்கும் இப்படத்தில், நடிகை ஆண்ட்ரியா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top