பியார் பிரேமா காதல் என்ற படத்தை கொடுத்த இயக்குநர் இளன், தற்போது வளர்ந்து வரும் நடிகர் கவினை வைத்து, ஸ்டார் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தை, ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.
வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்த இந்த திரைப்படம், தற்போது பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கியுள்ளது. அதாவது, கவின் மாதிரியான வளர்ந்து வரும் நடிகர்களுக்கான மார்கெட் என்பது 5 கோடி ரூபாயில் இருந்து 6 கோடி ரூபாய் வரை தான்.
ஆனால், லிஃப்ட், டாடா ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்த ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன், 8 கோடி ரூபாய் வரை படத்தின் மீது முதலீடு செய்தது. ஆனால், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சில பிரச்சனைகளால், படத்தின் பட்ஜெட் 12 கோடி வரை இழுத்துள்ளதாம்.
இதனால், படத்தின் ஓடிடி உரிமையை நல்ல தொகைக்கு விற்பனை செய்து, இந்த பிரச்சனையை சரி செய்துவிடலாம் என்று படக்குழுவினர் நினைத்திருந்தனர்.
ஆனால், படக்குழு சொல்லும் தொகைக்கு, படத்தை வாங்குவதற்கு எந்த நிறுவனமும் முன்வரவில்லையாம். இதன்காரணமாக, ஏப்ரல் மாதம் ரிலீஸ் இருந்த ஸ்டார் திரைப்படம், வேறு தேதிக்கு மாற்றப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.