Connect with us

Raj News Tamil

கவினின் திருமண தேதி அறிவிப்பு..!

சினிமா

கவினின் திருமண தேதி அறிவிப்பு..!

நட்புனா என்னனு தெரியுமா?, லிஃப்ட், டாடா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் கவின். தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் புதிய படத்தில் இவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவருக்கும், இவரது நீண்ட நாள் காதலி மோனிக என்பவருக்கும், திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது இவர்களது திருமண தேதி குறித்து கவினின் நெருங்கிய நண்பர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஆகஸ்ட் 20ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த அவரது பெண் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்களாம்.

More in சினிமா

To Top