இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இந்த படத்திற்கு பிறகு, ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
மேலும், சில திரைப்படங்களில், கதையின் நாயகியாகவும் அவர் நடித்துள்ளார். இவ்வாறு இருக்க, நடிகை கீர்த்தி சுரேஷ் இளம் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, குட் நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டியோ என்ற நிறுவனம், புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளது. இந்த படத்தில் தான், நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.