இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இந்த படத்திற்கு, பிறகு, ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
தற்போது, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் டிசம்பர் 11-ஆம் தேதி அன்று, கோவாவில், எளிமையான முறையில் திருமணம் நடக்க உள்ளதாம். நீண்ட நாள் காதலரை தான் அவர் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.