எதிர் நீச்சல், மான் கராத்தே, கத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சதீஷ்.
இவர் தற்போது நாய் சேகர், கான்ஜுரிங் கண்ணப்பன், வித்தைக்காரன் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்துள்ளார். அதில், கீர்த்தி சுரேஷின் தாய் தன்னை மாப்பிள்ளை அழைத்ததாக கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ், எதற்காக இவ்வாறு சொல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “சதீஷ்-க்கும், கீர்த்தி சுரேஷ்-க்கும் திருமணமானதாக பரவிய வதந்தி குறித்து” அவர் கூறியுள்ளார்.
அதன்பிறகே, மாப்பிள்ளை என்று கூறியதற்கான காரணம் குறித்து, சதீஷ் அறிந்துக் கொண்டுள்ளார்.