மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில், பேபி ஜான் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.
அப்போது, நடிகை கீர்த்தி சுரேஷை, “தோசா.. தோசா” என்று அங்கிருந்த ஊடகவியலாளர்கள் சிலர் கிண்டலடித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுத்த அவர், “எங்கள் ஊரில் அது பிரபலமான உணவு. எனக்கு அந்த உணவு பிடிக்கும். உங்களுக்கு பிடிக்காதா?” என்று தெரிவித்தார்.
இவ்வாறு தகராறு ஏற்பட தொடங்கியபோது, திடீரென குறுக்கிட்ட வருண் தவான், “நமது விருந்தாளிகளை கிண்டல் செய்வது சரியான விஷயம் அல்ல” என்று கூறினார். இதையடுத்து, கீர்த்தி சுரேஷை கிண்டலடித்த செய்தியாளர்கள், அமைதியானார்கள். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.