சினிமா
சேலையிலும் கவர்ச்சியா? ரசிகர்களை அசர வைத்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் புகைப்படம்!
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்த படத்திற்கு பிறகு, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
தற்போது, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும், கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும், அதிகப்படியாக நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகள் என்றாலே கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவது வழக்கம்.
ஆனால், தான் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களின் மூலம், அந்த வழக்கத்தை கீர்த்தி சுரேஷ் உடைத்து வருகிறார். இந்நிலையில், இவர் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில், தற்போது கலந்துக் கொண்டுள்ளார்.
அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. சேலை போன்ற பாரம்பரிய உடையிலும், கவர்ச்சியாக இருக்கும் இவரது புகைப்படம், சமூக வலைதளங்களில், ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
You must be logged in to post a comment Login