ரஜினி, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன், இணைந்து நடித்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரகு தாத்தா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனுக்காக, ஊடகத்திற்கு கீர்த்தி சுரேஷ் பேட்டி அளித்திருந்தார்.
அந்த பேட்டியில், அஜித்துடன் நடிப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அஜித்துடன் ஜோடியாக நடிக்க தான் எனக்கு விருப்பம்” என்றும், “நான் அவருடன் தங்கையாக நடிக்க மாட்டேன்” என்றும் அவர் கூறியுள்ளார். இவரது இந்த பளீச் பதில், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.