விஜய், சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் தெறி. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அந்த திரைப்படம் இந்தியில் பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இதில், விஜய் நடித்த கதாபாத்திரத்தில் வருண் தவானும், சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ்-ம் நடித்துள்ளனர். இந்த திரைப்படம், வரும் 25-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக, நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு வழங்கப்பட்ட சம்பளம் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, 6 கோடி ரூபாயை, நடிகைக்கு வழங்கியுள்ளார்களாம்.
பொதுவாக, மற்ற மொழி திரைப்படங்களில், 3 கோடி ரூபாயை தான், கீர்த்தி சுரேஷ் சம்பளமாக வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.