வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் 2-ஆம் பாகம், வரும் 20-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. ரிலீஸ்-க்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் செய்து வருகின்றனர்.
அந்த வகையில், இப்படத்தில் நடித்துள்ள கென் கருணாஸ், பிரபல ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில், விடுதலை 2-ஆம் பாகத்தில் நான் ஒரு சண்டைக் காட்சியில் நடித்துள்ளேன்.
அந்த காட்சியை படமாக்கியபோது, தனது விலா எலும்பு உடைந்துவிட்டது என்று கூறினார். மேலும், ஒரு வாரம் ஓய்வு எடுத்த பிறகு தான், என்னுடைய உடல்நலம் சரியானது என்றும் அவர் தெரிவித்தார்.